பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு அரசியல் குறித்து சமீப காலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி என்று தொடர்ச்சியாக ஆஸ்கர் விருது வென்றவர்களே, பாலிவுட்டில் தங்களை ஒதுக்கியதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "என் பெற்றோர் மற்றும் நான் வளர்க்கப்பட்ட சூழ்நிலை காரணமாகதான் திரைத்துறைக்குள் நுழைய எனக்குக் கதவு திறக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்வேன்.
எனது குடும்பப் பெயர் காரணமாக, வாய்ப்பு எளிதாகக் கிடைத்தது. அது மறுக்க முடியாத உண்மை. நான் வாழ்க்கையில் மெதுவாக கற்றுக்கொள்பவள். சரியான தகவல்தொடர்பு வழி எனக்குத் தெரியவில்லை, சரியான நபர்களை எவ்வாறு அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை.
உண்மையில் நான் இன்னும் சமூக ரீதியாக மோசமாக இருக்கிறேன். திரைத்துறைக்குள் செல்வது எளிதானது, ஆனால் தங்குவது கடினம். எனது குடும்பப் பெயர் திரைத்துறை கதவைத் திறக்க, திறவுகோலாக இருந்தது" என்று கூறியுள்ளார்.