தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லண்டனில் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன் - ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Shruti Haasan
Shruti Haasan

By

Published : Jan 29, 2020, 12:41 PM IST

நடிகை, பாடகி என பன்முகம் கொண்ட ஸ்ருதி ஹாசன் நேற்று தனது 34ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமாக இருந்துவரும் இவர், தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் 'லாபம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலையும் ஸ்ருதி பாடியுள்ளார்.

இதனிடையே தனது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடி மகிழ்ந்த ஸ்ருதி, நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள வீதிகளில் ஆட்டம் பாட்டம் என நடமாடி அசத்தியுள்ளார்.

இதுதொடர்பான காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், நான் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட பெண். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

எனது பிறந்தநாளை ஆடலுடன் கொண்டாடி மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முன்னதாக ஸ்ருதி ஹாசன், கஜோல் உள்ளிட்டோர் நடிக்கும் 'தேவி' என்ற பாலிவுட் குறும்படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க...

'Angry Bird'-ஆக மாறிய சல்மான் கான்

ABOUT THE AUTHOR

...view details