தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எட்ஜ் பாடலை பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்ருதி ஹாசன்! - எட்ஜ் பாடல்

எட்ஜ் பாடலை பாராட்டிய அனைவருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

By

Published : Aug 9, 2020, 8:03 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க நடிகை ஸ்ருதிஹாசன் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் இவர் பாடியுள்ள 'எட்ஜ்' பாடல் நேற்று(ஆகஸ்ட் 8) வெளியானது.

வாழ்க்கையையும் காதலையும் பற்றி கூறியுள்ள இப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், "இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், மகேஷ் பாபு, ராணா, நாக சைதன்யா, விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் இப்பாடலுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

உண்மையில் ஒருவித பயத்தோடு தான் இந்தப் பாடலை வெளியிட்டேன். ஆனால், இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது எனது குழுவின் கூட்டு முயற்சி. கண்டிப்பாக, இந்தப் பாராட்டை தலைக்குள் ஏற்றாமல், மனதளவில் வைத்து மகிழ்ச்சியடைவேன்.

இந்த பாராட்டுகள் அனைத்துமே என்னை தொடர்ச்சியாக இன்னும் வேகமாக, இயங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details