தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பக்தர்களை புண்படுத்திய ஸ்ரேயா... கோயில் வாசலில் காதலைப் பகிர்ந்த ஜோடி! - shriya saran in Tirupati

நடிகை ஸ்ரேயா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஸ்ரேயா
ஸ்ரேயா

By

Published : Sep 16, 2021, 7:08 AM IST

Updated : Sep 16, 2021, 8:43 AM IST

'உனக்கு 20 எனக்கு 18' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். பிறகு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துவந்த ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் செட்டிலான ஸ்ரேயா, தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஸ்ரேயா தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

ஸ்ரேயா

இதில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வாசலில் நின்று கொண்டு முகக்கவசம் அணியாமல் தனது கணவர் தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா.

இந்நிலையில், பக்தர்கள் பலரும் இப்படத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தும், கோயிலில் நின்று கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க:தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்!

Last Updated : Sep 16, 2021, 8:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details