சுஜனா ராவ் இயக்கத்தில் ஸ்ரேயா, நித்யா மேனன், சாருஹாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’கமனம்’. நிஜ வாழ்வின் எதார்த்தங்களையும் நிகழ்வுகளையும் கொண்ட கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
5 மொழிகளில் வெளியாக உள்ள ஸ்ரேயாவின் புதிய பட ட்ரெய்லர் வெளியீடு - ஸ்ரேயாவின் கமனம்
சென்னை : ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள 'கமனம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
![5 மொழிகளில் வெளியாக உள்ள ஸ்ரேயாவின் புதிய பட ட்ரெய்லர் வெளியீடு Gamanam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9509751-945-9509751-1605082159618.jpg)
Gamanam
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ள இப்படத்திற்க்கு ஞானசேகர் வி.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கருதூரி, வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தை ஞான சேகர் வி.எஸ் தயாரித்துள்ளார்.
கமனம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.