பாடகி ஸ்ரேயா கோஷல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். சில நாள்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், "தேவ்யான் வீட்டில் அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், நான் உடனடியாக வெளியே வந்து எனது முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்.