தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியான ஸ்ரேயா சரண்? - Ajay Devgan

RRR படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் தேவ்கனுக்கு ஜோடியான ஸ்ரேயா சரண்?
அஜய் தேவ்கனுக்கு ஜோடியான ஸ்ரேயா சரண்?

By

Published : Jan 30, 2020, 1:10 PM IST

'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் RRR. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்துவரும் இப்படத்தில் சமீபத்தில் அஜய் தேவ்கன் இணைந்தார்.

இதற்கிடையில் இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா சரண் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஹைதரபாத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஸ்ரேயா கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கவே ஸ்ரேயா, அஜய் தேவ்கன் த்ரிஷியும் என்ற படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர RRR படத்தில் அலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பத்து மொழிகளில் தயாராகிவரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'மைதான்' அஜய் தேவ்கானின் புதிய போஸ்டர்கள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details