தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஜித் பட நாயகியா இது? - உடல் பருமனுக்கு குட் பை சொல்லி சாதனை - விக்ரம் வேதா திரைப்பட நடிகை

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

shraddha-srinath

By

Published : Oct 25, 2019, 11:16 AM IST

தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த விக்ரம் வேதா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர், தமிழில் காற்று வெளியிடை, ரிச்சி, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வரும் ஷ்ரத்தா, இரும்புத்திரை 2 மற்றும் மரா ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார்.

அஜித், கிச்சா சுதீப்புடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

இதனிடையே தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவரா இது என்ற அளவுக்கு உடல் பருமனுடன் தோற்றமளிக்கும் ஷ்ரத்தா, ஐந்து ஆண்டுகளில் தான் எடுத்த கடின முயற்சியின் மூலம் உடல் பருமனைக் குறைத்து வென்று காட்டியிருப்பதாக கூறியுள்ளார்.

இரும்புத்திரை 2-ல் இணைந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்

இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், 'சினிமாத்துறைக்குள் நுழைவதற்கு முன்னர் அதிக உடல் பருமனுடன் இருந்தேன். உடல் பருமன் காரணமாக அழகு குறைந்து விட்டதே என்ற கவலை இருந்ததில்லை. ஆனால், ஆரோக்கிய நலன் கருதி மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தேன். 2014ல் அதிக எடையோடு இருந்தேன். நல்ல வேலை, சம்பளம் என் வாழ்க்கை முறையையே மாற்றியமைத்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் விரும்பியதை வாங்கிச் சாப்பிட்டேன். ஆனாலும், அவ்வப்போது எனது புகைப்படங்களைப் பார்த்து எனக்கே கோபம் வரும். எனது வயதுக்கேற்ற உடல் எடை இது அல்ல என்பதை உணர்ந்து, ஜிம்மில் இணைந்து உடல் எடையைக் குறைக்க முயற்சித்தேன்.

கலக்கல் போஸ் கொடுக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தினந்தோறும் ஐந்து நிமிடம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த நான், தொடர்ந்து படிப்படியாக பதினைந்து, இறுதியில் நாற்பது நிமிடம் வரை ஓடி, 18 கிலோ வரை குறைத்திருக்கிறேன்' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

'ஐடி கம்பெனி டூ இரும்புக்கடை' - அனுபவம் பகிரும் இயக்குநர் அதியன் ஆதிரை

ABOUT THE AUTHOR

...view details