நடிகை ஷ்ரத்தா கபூர் தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த விக்ரம் வேதா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இவர், தமிழில் 'காற்று வெளியிடை', 'ரிச்சி', 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வரும் ஷ்ரத்தா, இரும்புத்திரை 2, மாறா ஆகிய திரைப்படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கும் கலியுகம் படத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்புக்கொண்டுள்ளார். பேரழிவுக்குப் பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்த படம் உருவாகிறது.
இப்படத்தை ஆர்.கே. இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கே.எஸ். ராமகிருஷ்ணன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
பிசிஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வுசெய்து வருகின்றன.