‘விக்ரம் வேதா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷ்ரதா ஸ்ரீநாத். அதன்பிற்கு இவன் தந்திரன், ரிச்சி ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவரது கதாபாத்திரத்துக்கு பெரிதாக பெயரை வாங்கித் தரவில்லை. தற்போது அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. இதில் அஜித் உடன் முதன்முதலாக இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் அவருக்கு காவல்துறை அலுவலராக நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
அதிரடி ஆக்சனில் களமிறங்கும் யாஞ்சி..! - விஷால்
பெரிய வெற்றிப் பெற்ற 'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் உடன் அதிரடி போலீஸாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் ‘இரும்புத்திரை’. 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ஆனந்த் என்ற புதுமுக இயக்குநர் எடுக்க முடிவு செய்துள்ளார். இதில் ஷ்ரதா ஸ்ரீநாத் காவல்துறை அலுவராக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது அவர் முதன்முதலாக காவல்துறை அலுவலர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இரும்புத்திரை முதல் பாகத்துக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, இந்த படத்துக்கும் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு பிறகு ஷ்ரதா ஸ்ரீநாத்துக்கு நயன்தாரா போல, 'சோலோ' ஹீரோயின் வாய்ப்புகள் தேடி வரும் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.