வருண் தவான், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நடனத்தை மையப்படுத்தி உருவாகியது 'ஸ்ட்ரீட் டான்ஸர்' (Street Dancer) திரைப்படம். இதற்கு முன்பாக வெளியான 'ஏபிசிடி-2' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடன இயக்குநர் ரெமோ டிசோசா இயக்கும் இத்திரைப்படத்தில் பிரபுதேவா, நோரா ஃபடேஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வரும் 24ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெறுகிற இல்லீகல் வெப்பன் 2.0 (Illegal Weapon 2.0) என்னும் ஒரு பாடலின் டீஸர் காட்சியை வருண் தவானும், ஷ்ரத்தா கபூரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர்.
நாளை இப்பாடல் காட்சி வெளியாகவுள்ள நிலையில் இதன் டீஸர் காட்சி வைரலாகியுள்ளது. இப்பாடலில் பாகிஸ்தானி நடனுக்குழுவின் தலைவியாக ஷ்ரத்தாவும், இந்திய நடனக்குழுவின் தலைவனாக வருண் தவானும் வருகின்றனர். இருவருக்கும் இடையேயான நடனப் போரை இந்தப் பாடலில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டுச் சுற்றுலாவை முடித்துவிட்டு நாடு திரும்பிய ஆலியா - ரன்பிர்