நடிகை ஹன்சிகா மோத்வானி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது நாட்டில் நிலவும் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் திரை பிரபலங்கள் தங்களது திறமைகள், போட்டோஷூட், பிட்னஸ், சமையல், குறும்படங்கள் போன்றவற்றை அவ்வப்போது இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது நடிகை ஹன்சிகா தனது யூடியூப் சேனலில் 'யார் இந்த ஹன்சிகா மோட்வானி....?' என குறிப்பிட்டு 'What keeps me going - A short memoir' என்று தனது வாழ்க்கை பயணம் குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில தருணங்களில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகளை குறும்படமாக வெளியிட்டு அதற்கு தானே குரலும் கொடுத்து பேசியுள்ளார். அந்தக் குறும்படத்தில் அவர் பேசியிருப்பது, 'நான் ஒரு ஸ்டார், நடிகை என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனுஷி, கவலையற்றவர். கேமரா முன்பு நிற்பது மிகவும் பிடிக்கும். எனக்கு எப்பொழுதும் ஆதரவாக நிற்கும் எனது ரசிகர்களை மிகவும் பிடிக்கும். இது என் பாதை அல்லது high way நான் உண்மையான குறிக்கோள்களுடன் இருக்கும் கொஞ்சம் கிரேசியான நபர் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க... வைரலாகும் ‘மஹா’ வீடியோ!