உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க திரைத்துரையில் பல்வேறு விதமான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, “திரைப்படங்களில் ஏற்படுத்தப்படும் கற்பனை வில்லன் போல கரோனா வைரஸ் நிஜத்திலும் வந்துவிட்டது. பாதுகாப்பு வசதி உள்ள அமெரிக்காவைத் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் இதன் தாக்கம் மிகவும் குறைவு என்றாலும் மிகப்பெரிய உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.