தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ரஜினி... பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! - rajini movie

சென்னை: ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள 'ரஜினி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(மார்ச்.17) தொடங்கியுள்ளது.

rajini
ரஜினி

By

Published : Mar 17, 2021, 5:05 PM IST

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது பாம்பாட்டம் படத்தை தயாரித்து வருகிறார். இதை தவிர 'ரஜினி' என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்தப் பட தயாரிப்பாளருடன் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கினார். அதேபோல, ரஜினி படத்திலும் இந்த வெற்றிக் கூட்டணி ஜொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் 'மஹாராஜா' படத்தில் நடித்த விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த "கைநாட் அரோரா" தமிழில் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோ வி. நாராயணன் பணியாற்ற வசனம் அகில் பாபு அரவிந்த் எழுத, இசையமைப்பாளராக அம்ரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், "ரஜினி" படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (மார்ச்.17) தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி படம்

இதுகுறித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், " திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்க உள்ளேன். படத்தின் நாயகன் ரஜினி (விஜய் சத்யா) எதிர்பாராதவிதமாக ஒரு நாள் இரவில் ஏற்பட்ட விபத்தினால் பல சிக்கல்களை சந்திக்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. படத்தில் நாயகனின் பெயர் ரஜினி பிரியன். அவரை நண்பர்கள் செல்லமாக ரஜினி என்று அழைப்பார்கள். அதனால்தான் இப்படத்திற்கு "ரஜினி" என பெயர் வைத்துள்ளேன் என்றார்.

இதையும் படிங்க:'முதலமைச்சரின் தத்துப் பிள்ளை நான்' - கடம்பூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details