நடிகையும், தொழிலதிபருமான ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் 2019ஆம் ஆண்டிற்கான சேம்பியன் ஆஃப் சேஞ்ச் விருதினைப் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த தூய்மை இந்தியா திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும், இத்திட்டத்தினை கடைப்பிடிக்கக்கோரி பொதுமக்களிடம் வலியுறுத்தியதற்காகவும் இந்த விருதினை இவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த விருதினை டெல்லியில் குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஷில்பாவும் அவரது கணவரும் பெற்றுக்கொண்டனர்.
விருது குறித்து பேசிய ஷில்பா, ”இந்த விருதைப் பெறுவதில் நான் பெருமை அடைகிறேன். நமது நாட்டின் தூய்மையைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நமது வீட்டை நம்மால் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்போது, நாட்டின் தூய்மையை ஏன் பேண முடியாது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.