தென்னிந்திய சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் விஷ்ணு வர்தன். இவர் கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின், உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ’ஷெர்ஷா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.
விஷ்ணுவர்தனின் ’ஷெர்ஷா’ பட ரிலீஸ் தேதி வெளியீடு! - shersha release date
சென்னை: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஷெர்ஷா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஷெர்ஷா
இந்நிலையில் தற்போது , ’ஷெர்ஷா’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகுமென எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தர்மா நிறுவனம் சார்பில் கரண் ஜோகர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக இப்படத்தின் அறிவிப்பிற்காகக் காத்திருந்த ரசிகர்கள், இதனைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காதலால் கரோனாவை மறந்த அஜித் பட வில்லன் - போலீஸ் வழக்குப்பதிவு!