தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

210 நாடுகள் - புதிய சாதனை படைத்த ஷெர்ஷா - ஷெர்ஷா படப்பிடிப்பு

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ’ஷெர்ஷா’ திரைப்படம், அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஷெர்ஷா
ஷெர்ஷா

By

Published : Sep 1, 2021, 11:46 AM IST

தமிழில் 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா', 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'ஷெர்ஷா'.

கார்கில் போரையும், போரில் நாட்டுக்காக உயிர்நீத்து வீர மரணமடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றையும் மையமாக வைத்து 'ஷெர்ஷா' படம் உருவாகியுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, விக்ரம் பத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜாவெத் ஜெஃப்ரி, ஹிமான்ஷு மல்ஹோத்ரா, பரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தைக் கரண் ஜோஹர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியான இப்படம், அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இந்த தகவலை அமேசான் ஃபிரைம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

'ஷெர்ஷா' படத்தை இந்தியாவில் 4100 சிட்டி, டவுன்களிலும் 210 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அதேபோல் ஐஎம்டிபியில் 8.9 மதிப்பீடு பெற்ற படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் கதாநாயகன் சித்தார்த், நாயகி கியாரா அத்வானி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

51 நாள் தானா... சூர்யாவின் செயலால் அசந்துபோன படக்குழு

ABOUT THE AUTHOR

...view details