தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேலாடையின்றி நடித்த அனுபவம்: பகிரும் ஷரோன் ஸ்டோன் - ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் திரைப்படங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் முதன்முதலாக மேலாடையின்றி நடித்த படப்பிடிப்பு அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.

sharon stone
sharon stone

By

Published : Jul 18, 2020, 4:33 PM IST

கோல்டன் குளோப் வென்ற ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன், கடந்த 1984 ஆம் ஆண்டு தான் கலந்துகொண்ட 'Irreconcilable Differences' படப்பிடிப்பில், முதல் முறையாக மேலாடையின்றி நடித்த அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"இந்த திரைப்படத்தில் மேலாடையின்றி நான் இருக்கும் ஒரு காட்சி இருந்தது. நெருக்கம் அல்லது நிர்வாணம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது நடிகர்கள் செட்டில் வசதியாக இருப்பதற்கு அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் இருக்க வேண்டும்.ஆனால், இதில் அப்படி யாரும் எனக்கு இல்லை. அதுமட்டுமின்றி இந்தக் காட்சியானது படக்குழுவினர் முன்பு படம் பிடிக்கப்பட்டதாகக் கூறினார். அப்போது செட்டில் இருப்பவர்களை பார்க்கையில், எனக்கு பல லட்சக்கணக்கான நபர்கள் அங்கு இருப்பது போல் தோன்றியது. நான் செட்டில் இருப்பவர்களை வெளியேற சொன்னேன்.

அவர்கள் முன்பு என்னால் நடிக்க முடியாது என்று கூறினேன். அந்த நேரத்தில், நான் மிகவும் பயந்தேன். உங்கள் இதயத்துடிப்பை உங்கள் காதுகளில் எப்போவாவது கேட்டுட்டது உண்டா? அன்று நான் கேட்டேன் என்று கூறினார்.

முன்னதாக, ஷரோன் ஸ்டோன் கடந்த 1992 ஆம் ஆண்டு உண்மை சம்பவம் ஒன்றை வைத்து உருவாக்கப்பட இருந்த படத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர் பால் வெர்ஹோவன் அவருடன் நான் அமர்வதற்கு முன்பு, தனது உள்ளாடைகளை கேட்டிருந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details