கன்னடத்தில், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான 'சஜ்னி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. இதைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் 'மிரட்டல்' படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
அப்படம் நல்ல வரவேற்பைப் பெறாததால் மீண்டும் கன்னடம் பக்கமே சென்றார். இருப்பினும் , தமிழில் படங்களில் நடிக்காமல், 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு', சண்டக்காரி, நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தனது ஆண் நண்பர் லோகேஷுடன் சொகுசு காரான ஜாகுவாரில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்றுள்ளார். பெங்களூரு வசந்த் நகர் ரயில்வே பாலத்தில், இவரது கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக, நிலை தடுமாறி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.