தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இராவண கோட்டம் ட்ரெய்லர் வெளியீடு?; சாந்தனு விளக்கம்! - இராவண கோட்டம் குறித்த சாந்தனு ட்விட்

இராவண கோட்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் என சமூக வலைதளங்களில் வெளிவந்த காணொலி போலி என நடிகர் சாந்தனு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சாந்தனு ட்விட்
சாந்தனு ட்விட்

By

Published : Jan 30, 2022, 9:57 AM IST

'மதயானைக் கூட்டம்' திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் நடிகர் சாந்தனுவை வைத்து 'இராவண கோட்டம்' என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கிவருகிறார். இத்திரைப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். நடிகர் பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் என சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வெளியானது.

சாந்தனு ட்விட்

தற்போது இதுகுறித்து சாந்தனு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது அடுத்த திரைப்படமான 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் என போலியான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை தயவு செய்து ரசிகர்கள் தவிர்த்திடவும். ட்ரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:80s கிட்ஸ்களின் கனவு நாயகிக்கு இன்று பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details