உலகப் பெருந்தொற்றான கரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போதுவரை கரோனா தொற்றுக்கு 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேசிய ஊரடங்கை மோடி அமல்படுத்தியுள்ளார். கரோனா தொற்றால் அனைத்து மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர்.
லாக் டவுனால் ஜிம் லாக்... இதை வச்சி உடற்பயிற்சி செய்யலாம் - ஜிம் 'மாஸ்டர்' சாந்தனு! - கரோனாவால் தேசிய ஊரடங்கு அமல்
தேசிய ஊரடங்கு உத்தரவால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டாலும் வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![லாக் டவுனால் ஜிம் லாக்... இதை வச்சி உடற்பயிற்சி செய்யலாம் - ஜிம் 'மாஸ்டர்' சாந்தனு! Shanthanu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6565443-974-6565443-1585324013598.jpg)
Shanthanu
இந்நிலையில், தேசிய ஊரடங்கு உத்தரவால் ஊரே முடங்கியுள்ள சூழலில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்பது குறித்த வீடியோ ஒன்றை சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லேப்டாப் பேக், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சாந்தனு உடற்பயிற்சி செய்கிறார்.