தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD சாந்தனு - வாழ்த்து மழையில் நனையும் 'வேட்டிய மடிச்சுக்கட்டு' குட்டிப் பையன் சோனு! - சாந்தனு பிறந்தநாள்

பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாந்தனு
சாந்தனு

By

Published : Aug 24, 2021, 6:59 AM IST

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் முன்னணி இயக்குநர், நடிகராக வலம்வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன் சாந்தனு, ’வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பாக்கியராஜ் இயக்கி நடித்த இந்தப் படத்தில் அவரது மகனை 'சோனு' என்ற கதாபாத்திரம் மூலம் திரையுலகிற்கு அடையாளம் காண்பித்தார். இதனையடுத்து 2008ஆம் ஆண்டு, ’சக்கரகட்டி’ படத்தில் நடித்து இளம் பெண்களின் மனத்தில் இடம்பிடித்தார் சாந்தனு.

சாந்தனு - விஜய்

பிறகு வரிசையாக ஏகப்பட்ட படங்களில் நடித்துவந்த இவர் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு முதல் முறையாக இந்தப் படம் மூலம் அவருடன் இணைந்து நடித்திருந்தார். இவர் தற்போது, 'இராவண கோட்டம்' திரைப்படத்தில் நடித்துவருகிறார். ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

சாந்தனு - கீர்த்தி

சாந்தனு பள்ளி வயது முதல் காதலித்துவந்த கீர்த்தி விஜய்யை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தற்போது ’வித் லவ் சாந்தனு கிகி’ என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் ஒன்று வைத்துள்ளனர்.

இந்நிலையில் சாந்தனு இன்று (ஆகஸ்ட் 24) தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். மேலும் முதல்முறையாக பிறந்தநாளன்று சாந்தனு, தனது மனைவியுடன் இல்லாமல் இருக்கிறார்.

சாந்தனு - கீர்த்தி

படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் 700 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், மிகவும் அவரை மிஸ் செய்கிறேன் என அவரது மனைவியும், தொகுப்பாளினியுமான கீர்த்தி தனது சமூக வலைதளத்தில் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திரையரங்குகளை செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு நன்றி - பாரதிராஜா!

ABOUT THE AUTHOR

...view details