தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கீர்த்தி. இவரைச் செல்லமாக கிகி என அழைப்பர். இவர் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி, ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. இவர் தனது கணவருடன் கிக்கி டான்ஸ் ஸ்டுடியோ என்ற நடனப் பள்ளியை நடத்திவருகிறார்.
தொகுப்பாளினி, நடன ஆசிரியர் எனத் திறமை காட்டிவந்த கீர்த்தி, கரோனா அச்சுறுத்தலின்போது தனது கணவர் எடுத்த குறும்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.