தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'A1' கூட்டணியில் மீண்டும் சந்தானம்: படப்பிடிப்பு இன்று தொடக்கம்! - ஏ1

'A1' படத்தின் கூட்டணியில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாக உள்ள புதியப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

shanthanam
shanthanam

By

Published : Mar 16, 2020, 8:34 PM IST

இயக்குநர் ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் நடித்து, கடந்த வருடம் வெளியான படம் 'A1'. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் அனைத்து தரப்பு மக்கள், சமூக வலைத்தளங்கள் , விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இதனால் இப்படம் பெரும் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தில் நடிகர் சந்தானம் - இயக்குநர் ஜான்சன்.கே - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்காக தற்காலிகமாக புரோடக்சன் நம்பர் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா நடிக்கிறார். இவர் காவிய தலைவன், செம போத ஆகாதே, கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் படப்பிடிப்பு மார்ச் 31 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: விஜய் சேதுபதியை மிஞ்சும் சந்தானம்!

ABOUT THE AUTHOR

...view details