இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சில நாள்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது. இதில் படப்பிடிப்பில் இருந்த மூன்று நபர்கள் உயிரிழந்தனர். திரைத்துறையில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. படக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலரும் உயிரிழந்தோருக்குத் தங்களது இரங்கலை தெரிவித்துவந்தனர்.
'அந்த கிரேன் என்மேல் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'- ஷங்கர் - இந்தியன் படப்பிடிப்பு விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் இரங்கல்
'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அதில் 'கிரேன் என்மேல் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று அவர் பதிவு செய்தது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
விபத்தையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது இரங்கலை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் 'மிகுந்த மன வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். விபத்து நடந்ததிலிருந்து படக்குழுவினரை இழந்த அதிர்ச்சியினாலும், உறக்கமில்லா இரவுகளினாலும் தவித்துவருகிறேன். நூலிழையில் அந்த கிரேனிடமிருந்து தப்பித்தேன். அது என்மேல் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலும், பிரார்தனைகளும்' என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பிரபல இயக்குநருடன் மீண்டும் இணைகிறார் சூர்யா...!