தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் கன்னக்குழி அழகி ஷாலினி! - Ranveer singh

நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அடியெடுத்துவைக்கிறார்.

Shalini Pandey

By

Published : Oct 19, 2019, 1:38 AM IST

Updated : Oct 19, 2019, 1:58 AM IST

'அர்ஜுன் கபூர்' எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் ரசிகர்களின் மனதை தனது கன்னக்குழியால் கவர்ந்தவர் நடிகை ஷாலினி பாண்டே.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். தமிழில் 'கொரில்லா' படத்தில் அறிமுகமாகி, ஜீ.வி.பிரகாஷுடன் '100% காதல்' திரைப்படத்திலும் நடித்தார்.

பிறகு 'மூடர் கூடம்' திரைப்படத்தை இயக்கிய நவீனின் இயக்கும் 'அக்னி சிறகுகள்' திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதிலிருந்து அவர் பின்வாங்கவே அப்படத்தில் அக்ஷ்ரா ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் 'ஜெயேஷ்பை ஜோர்டர்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததனால், முந்தைய படத்திலிருந்து ஷாலினி பின் வாங்கிவிட்டாராம்.

இந்த படத்தை திவ்யங் தக்கர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஹீரோ' சிவாவின் இரண்டாம் பார்வை!

Last Updated : Oct 19, 2019, 1:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details