இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் 'ஹீரோ'. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார். பள்ளி மாணவர்கள் கண்டுப்பிடிக்கும் கருவிகள் எப்படி பெரிய நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றன என்பதே படத்தின் கதையாகும்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தமிழைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் 'சக்தி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.