தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ’அசுரன்’. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி இந்திய அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.
’அசுரன்’ படத்தை பார்த்த ஷாருக் - சொன்னது இதுதான்? - தனுஷ்
’அசுரன்’ படத்தின் ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து, இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த ஷாருக்கான் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாகக் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். தற்போது ஷாருக்கான் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுவது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அசுரன்’ படத்தைப் பார்த்த ஷாருக்கானின் நெருங்கிய நண்பர் கரண் ஜோகர், படக்குழுவுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.