ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் உருவான ‘கில் பில்’ படங்களில் ரீமேக் உரிமைகளை நிகில் திவேதி பெற்றுள்ளார். வழக்கமான பழிவாங்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், அதன் அதீத சண்டைக் காட்சிகளுக்காகவும், பிரமிக்க வைக்கும் இசைக்காகவும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. நிகில் திவேதி இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்க அனுராக் கஷ்யப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குவெண்டின் டேரண்டினோ படத்தில் ஷாருக்கான்! - kill bill series
குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் உருவான ‘கில் பில்’ (kill bill) பட பாகங்களின் ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுராக் உடன் நீண்டகாலமாக பணிபுரிய வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் ஷாருக்கான், இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற தற்காப்புக்கலை கலைஞரும், நடிகருமான டேவிட் கராடைன் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ’கில் பில்’ படத்தின் முன்னணி கதாபாத்திரம் பெண் என்பதால், கதாநாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையில் உள்ளனர். டாப்சி, தீபிகா படுகோன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.