கரோனா ஊரடங்கின் காரணமாக சின்னத்திரை முதற்கொண்டு அனைத்து படப்பிடிப்புகளும் கடந்த மார்ச் மாதம் முதலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தான் நடித்து வந்த ஜெர்ஸி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தினை பிரிந்து தான் மிகவும் வாடுவதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் நடித்து வரும் ஜெர்ஸி படத்தில் தன் கதாபாத்திரம் கிரிக்கெட் மட்டையை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
விளையாட்டை மையப்படுத்திய கதையைக் கொண்ட இத்திரைப்படம், கடந்த ஆண்டு தெலுங்கில் இதே பெயரில் நானி, ஷ்ரதா கபூர் நடிப்பில், கௌதம் தின்னானூரி இயக்கத்தில் வெளியாகி, பெரும் வெற்றிபெற்ற ஜெர்ஸி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதலே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷாந்தார் திரைப்படத்திற்குப் பிறகு தன் தந்தையும் முன்னாள் நடிகருமான பங்கஜ் கபூருடன் இப்படத்தில் ஷாஹித் திரையில் தோன்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அம்மாக்களுடன்... திரைப்பிரபலங்கள்!