தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநரை ஆச்சரியப்படுத்திய டாப்ஸி! - இயக்குநரை ஆச்சரியப்படுத்திய டாப்ஸி!

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நடிகை டாப்ஸி, தான் நடிக்கும் சபாஷ் மித்து படத்திற்காக கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறார்.

டாப்ஸி
டாப்ஸி

By

Published : May 31, 2020, 9:11 PM IST

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, பாலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாகிறது.

அந்தவகையில் தற்போது பாலிவுட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாகிறது.

'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள, இப்படத்தில் நடிகை டாப்ஸி, மிதாலியாக நடிக்கவுள்ளார். ராகுல் தொலாகியா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா வைரஸ் காரணமாகத் தொடங்குவதில் தாமதம் நீடிக்கிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் பேசுகையில், "டாப்ஸி இந்தப் படத்தில் நடிக்க பொருத்தமானவர். இவர் கிரிக்கெட் வீராங்கனையாக சிறப்பாக படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகப் பயிற்சி கொடுக்கும் குழுவை ஏற்பாடு செய்தோம்.

ஆனால், அதற்குள் ஊரடங்கு காரணமாக முறையான பயிற்சி அளிக்க முடியவில்லை. இருப்பினும், டாப்ஸி வீட்டில் இருந்தவாறே, இப்படத்திற்காகப் பயிற்சி எடுத்து வருகிறார். அவரின் இந்தச் செயல் படக்குழுவிற்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்" என்றும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details