நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் ’ப்ரோ’ பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள வேளச்சேரியில் நடைபெற்றது. அவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி பேசுகையில், ”நடிகர் சந்தானம் ஒரு காமெடி நடிகர் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், அவர் ஒரு திறமையான நடிகர். தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் சந்தானமும் ஒருவர். அவருக்குள் ஒரு வெறி இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு எமோஷனல் சீன் இருக்கிறது. மூன்றரை நிமிடங்கள் ஓடும் அந்தக் காட்சியை சந்தானம், ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டார்.