சென்னை:விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா, தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அன்றைய நாள் அவர் பதிவிட்ட புகைப்படமும், அதையொட்டி அவர் வெளியிட்ட அறிவிப்பும் அவரது ரசிகர்களை ஃபீல் செய்யவைத்துள்ளது.
மாப்பிள்ளை, ராஜா ராணி உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் வைஷாலி நடித்துள்ளார். தற்போது, கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு உள்ளிட்ட சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதுவரை அவர் சீரியலில் வில்லியாகவே பெரும்பாலும் நடித்திருக்கிறார்.