தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’இயற்கை இருக்கும்வரை விவேக் வாழ்வார்’ - vivek died

சென்னை: நடிகர் விவேக் இயற்கை இருக்கும்வரை விவேக் வாழ்வார் என நகைச்சுவை நடிகர் செந்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செந்தில்
செந்தில்

By

Published : Apr 17, 2021, 3:40 PM IST

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்குக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களிலும், நேரில் சென்றும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும்வருகின்றனர்.

அந்தவகையில் நகைச்சுவை நடிகர் விவேக் மறைவு குறித்து செந்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அன்பு தம்பி சின்ன கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். அவர் ஒரு சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர்.

எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும்வரை இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். சினிமா இருக்கும்வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:’தங்கமான மனிதர்’ - கண்ணீருடன் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி

ABOUT THE AUTHOR

...view details