தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பிரபல தெலுங்கு நடிகர்! - லேட்டஸ் சினிமா செய்திகள்

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தெலுங்கு நடிகர் ராஜபாபு இன்று (அக்.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 64.

Raja Babu
Raja Babu

By

Published : Oct 25, 2021, 4:47 PM IST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் நடிகர் ராஜபாபு. இவர் ஊரிக்கு மோனகாடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர்.

இதன் பின் தெலுங்கு முன்னணி நடிகர்களான வெங்கடேஷ், மகேஷ்பாபு உள்ளிட்டோரின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் ராஜபாபு நடிததுள்ளார்.

சினிமாவில் மட்டுமின்றி, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட சில விருதுகளை ராஜபாபு பெற்றுள்ளார்.

கடந்த சிலநாள்களாக உடல்நலக்குறைவு காரணமாக ராஜபாபு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜாபாபு (64) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தெலுங்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்..!

ABOUT THE AUTHOR

...view details