பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பிரபலமானவர் ஷபானா. இவர் 'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாகச் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகை ஷபானாவுக்கும், ஆர்யனுக்கும் இன்று (நவ.11) திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் வேலைக்காக சென்னைக்கு வந்தேன். முடிந்ததும் கிளம்பிவிடலாம் என்று இருந்தேன். ஆனால் சென்னையில் செட்டிலாகும் நிலைமை வரும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.