தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். இயக்குநராக வலம் வந்த இவர், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.
உன் கனவை கைவிடாதே 'சாணிக் காயிதம்' செல்வராகவனின் புதிய புகைப்படம்! - செல்வராகவனின் படங்கள்
சென்னை: இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'சாணிக் காயிதம்' திரைப்படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (பிப்.26) சென்னையில் தொடங்கியது. இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.
ஒரே கட்டமாக, ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்ன நடந்தாலும் சரி உன் கனவை கைவிடாதே' எனக்கூறி, படப்பிடிப்பிற்குத் தயராகும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். செல்வராகவன் தற்போது தனுஷை நாயகனாக வைத்து 'நானே வருவேன்' படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை இயக்கவுள்ளார்.