தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி..! - அடுத்த படம்

இயக்குநர் செல்வராகவன், நடிகர் ஜெயம் ரவியை வைத்து அடுத்த படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன்

By

Published : Apr 7, 2019, 8:11 PM IST

இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமன கதைக்களத்துடன், தன் மனதில் இருப்பவற்றை காட்சிகளாக பிரதிபலிப்பவர். திரை வடிவில் புதுமையை விரும்பிய நாயகனாக பார்க்கப்படும் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இன்றளவும் இருந்துவருகிறது.

எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதைதான் ஹீரோ என்பதை உணர்ந்து சமரசம் செய்யாமல் பயணித்து வருகிறார். இவர் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படம் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி வெளியாகிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக யாரை வைத்து இயக்குவார் என்ற கேள்வி எழுந்தநிலையில், இவர் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details