தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் அறிவிப்பு? - selvaraghavan nenjam marappathillai

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்து நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

selvaraghavan nenjam marappathillai release
selvaraghavan nenjam marappathillai release

By

Published : Jan 31, 2021, 7:03 PM IST

செல்வராகவன் இயக்கம், எஸ்.ஜே. சூர்யா நடிப்பு, யுவனின் இசை என மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திரைப்படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'.

இதில் ரெஜினா, நந்திதா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் பல்வேறு பைனான்ஸ் பிரச்னைகளால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. கரோனா தொற்றால் நிறுத்திவைக்கப்பட்ட பல திரைப்படங்களும் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது.

நெஞ்சம் மறப்பதில்லை
இந்தச் சூழ்நிலையில் இப்படத்தை அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details