Selvaraghavan Apologize: நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. டைம் லூப்பை அடிப்படையாக வைத்து வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான செல்வராகவன் மாநாடு படத்தைப் பாராட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் ட்விட்டர் பதிவு அதில், " தாமதமாக மாநாடு திரைப்படம் பார்த்ததற்கு மன்னிக்கவும். ரசித்து பார்தேன். சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா அருமை. வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி!” என பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட சிம்பு ரசிகர்கள், செல்வராகவனின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Sivakarthikeyan Gesture: 'டிரம்ஸ்மேனுக்காக சைகை காட்டிய சிவகார்த்திகேயன்'; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!