'காதல் கொண்டேன்' படத்தை இயக்கிய பின் இயக்குநர் செல்வராகவன் இரண்டாவது படமாக '7ஜி ரெயின்போ காலனி' படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா (கதிர்) அறிமுகம் ஆனார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் (அனிதா) நடித்திருந்தார். கதிரும் அனிதாவும் இன்றைக்கும் மறக்க முடியாத காதலர்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இருந்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை செல்வராகவனுக்கு பெற்றுத் தந்தது. படத்தின் முக்கிய பலமாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இருந்தார். தனது புதிய காட்சி அமைப்புகள் மூலம் இப்படத்தின் வழியாக ரசிகர்களை அவர் வெகுவாகக் கவர்ந்தார்.
2004ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வெளியான இப்படம், இன்றுடன் 16 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், #16yearsof7grainbowcolony என்ற ஹேஷ் டேக்குடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இது போல் ஒரு காதல் கதையை இன்றைய சூழலில் சொல்ல மிகப் பெரும் ஆசை" என்று பதிவிட்டுள்ளார்.
”7ஜி ரெயின்போ காலனியை இன்றைய சூழலில் சொல்ல ஆசை!” - இயக்குநர் செல்வராகவன் - செல்வராகவனின் புதிய படங்கள்
சென்னை : '7ஜி ரெயின்போ காலனி' போன்ற படத்தை இன்றைய சூழலில் மீண்டும் சொல்ல ஆசையாக இருப்பதாக செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி
செல்வராகவனின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.