தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்வராகவன் பிறந்த நாளுக்கு இரட்டைப் பரிசு! - நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சாணிக்காகிதம்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் பிறந்த நாளான இன்று (மார்ச் 05) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Selvaragavan starring SaaniKaayidham new poster release, Selvaragavan Birthday special, Saanikaaayidham new poster, selvaragavan new look, Nenjam Marappathillai, Chennai latest, Saanikaayidham update, சாணிக்காகிதம் புதிய போஸ்டர், செல்வராகவன் பிறந்தநாள், நெஞ்சம் மறப்பதில்லை, சென்னை
selvaragavan-starring-saanikaayidham-new-poster-release

By

Published : Mar 5, 2021, 1:24 PM IST

சென்னை:இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. தனித்தன்மை மிக்க படைப்புகளால் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கும் செல்வராகவனுக்கு இன்று பிறந்தநாள். இவருக்குப் பிறந்தநாள் பரிசாக இவரது இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த "நெஞ்சம் மறப்பதில்லை" படம் இன்று (மார்ச் 05) வெளியாகியுள்ளது.

மேலும் இயக்குநரான செல்வராகவன் "சாணிக்காகிதம்" படத்தின் மூலம் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். 'ராக்கி' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் செல்வராகவனின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் மிகவும் மிரட்டலான தோற்றத்தில் செல்வராகவன் தோற்றமளிக்கிறார். சமூக வலைதள ரசிகர்கள் மத்தியில் இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:'தமிழில் கதைக்கும் விஜய் சேதுபதி.. ஏற்க மறுக்கும் தமிழ்நாடு’

ABOUT THE AUTHOR

...view details