தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். இயக்குநராக வலம் வந்த இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘சாணிக் காயிதம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இதில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும், ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிறது.
நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனின் 'சாணிக் காயிதம்'! - Latest kollywood news
‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Saani Kaayidham
நடிகராக அறிமுகமாகவுள்ள செல்வராகவனை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.