தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சினிமாவை மிகவும் நேசிக்கிறவன் நான்' - ஐசரி கணேஷ்

என்னுடைய படமாக இருந்தாலும் சரி வேறு படமாக இருந்தாலும் சரி நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பேன் இல்லயென்றாலும் நேரடியாக கூறிவிடுவேன் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

Ishari K. Ganesh
Ishari K. Ganesh

By

Published : Feb 2, 2020, 2:07 PM IST

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ரத்தின சிவா இயக்கியுள்ள படம் 'சீறு'. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், "சில இயக்குநர்கள் கதை நன்றாகச் சொல்வார்கள்; ஆனால் படத்தில் ஒன்றும் இருக்காது. சிலருக்கு கதை சொல்லத் தெரியாது; ஆனால் படம் மிக நன்றாக எடுப்பார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் அப்படியில்லை, இரண்டையும் மிகச்சரியாகச் செய்துள்ளார்.

இயக்குநர் ரத்ன சிவா -ஐசரி கணேஷ்

என்னுடைய படமாக இருந்தாலும் சரி, வேறு படமாக இருந்தாலும் சரி, நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பேன். இல்லயென்றாலும் நேரடியாக கூறிவிடுவேன். நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறவன், திரையரங்கில் சென்று நிறைய படம் பார்ப்பேன். எங்கள் நிறுவனம் தயாரித்த படங்களை இதுவரை மற்றொரு நிறுவனத்திற்கு கொடுத்து வெளியிட்டிருக்கிறோம்.

ஆனல் முதன்முறையாக நாங்களே தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல; ஆந்திராவிலும் வெளியிடுகிறோம். அந்தளவிற்கு இந்தப் படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் 500 திரையரங்கு அதேபோன்று ஆந்திராவிலும் 500 திரையரங்குகளில் படத்தை நாங்கள் வெளியிடுகிறோம். இந்தப் படம் 100 விழுக்காடு ஜீவாவிற்கு மிகப்பெரிய படமாக இது இருக்கும்.

ஜீவா - ஐசரி கணேஷ் - டி. இமான்

2020இல் ஐந்து படம் வெளியிடவுள்ளோம். எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் மக்கள் ரசிக்கும்படி இருக்கும். இந்தப் படத்தின் இசை மிக அருமையாக அமைந்துள்ளது அதற்காக இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. இமான் அவர்கள் நேரத்தை சரியாகப் கடைப்பிடிப்பவர். மற்றவர்கள்போல் முன்தொகை கேட்கமாட்டார். ஒவ்வொரு பாடலையும் குறிப்பிட்ட தேதியில் முடித்துவிட்டு பணம் பெற்றுக்கொள்வார்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details