இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சீறு'. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். நடிகர் நவ்தீப் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
வேல்ஸ்ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். காதல், ஆக்ஷன் என கமர்ஷியலாக உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதனையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், “வேல்ஸ் பிலிம்ஸ் வேலை செய்வது சொந்த வீட்டில் இருப்பது போல் இருக்கும். 'சீறு' படத்தில் தான் பணியாற்றிய அனுபவமும் இதுபோன்றுதான். நான் இப்போது இசையத் தவிர பிற இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். விரைவில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவேன்.
'றெக்க' படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா பாடல் உருவாக காரணம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்கள் தான்.