'சீறு' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ரத்தின சிவா படம் குறித்த தன் அனுபவங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்தார்.
அப்போது பேசிய அவர், படத்தின் கதையை முதலில் ஐசரி கணேஷை சந்தித்துக் கூறியதாகத் தெரிவித்தார். படத்தின் கதையை ஐசரி கணேஷ் முழுவதும் கேட்கவில்லை எனத் தெரிவித்த இயக்குநர், படத்தில் இடம்பெற்ற பவித்ரா என்ற கதாபாத்திரத்தின் செய்தியாளர் சந்திப்பு காட்சியை மட்டும் தான் கூறியதாகவும்; அதைக் கேட்டவுடனே இந்தப் படத்தை நாம் எடுத்துவிடலாம் என்று ஐசரி கணேஷ் உடனடியாக ஒப்புதல் அளித்தார் எனவும் கூறினார்.
தொடர்ந்து நடிகர் ஜீவாவை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பைத் தொடங்கியதாகவும் படப்பிடிப்பில் இயக்குநர் ஜீவா கலகலப்பாக எனர்ஜியுடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐசரி கணேஷுடன் இயக்குநர் ரத்தின சிவா தனது இயக்கத்தில் வெளிவந்த 'றெக்க' படத்தின் மாலா டீச்சர் கதாபாத்திரம்போல், இப்படத்தில் பவித்ரா கதாபாத்திரம் நிற்கும் எனத் தெரிவித்த ரத்தின சிவா, இசையமையப்பாளர்களில் நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பவர் டி. இமான் எனவும்; அவரது இசையில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும் எந்த இயக்குநருடன் இணைந்தாலும் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுப்பவர் இமான் எனவும் புகழாரம் சூட்டினார்.
இந்தப் படத்தில் நடிக்க ஏழு மாணவிகள் தேவைப்பட்டார்கள் எனவும் அதற்காக சுமார் 600 பேரை ஆடிஷன் செய்து, ஏழு பேரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததாகவும் ரத்தினசிவா தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வேறொருவரைக் காதலிக்கும் சனம் ஷெட்டியுடன் நான் எப்படி வாழ முடியும்' - ’பிக்பாஸ்’ தர்ஷன்