கரோனா நோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஊரடங்கைப் பின்பற்றாமல் வீட்டை விட்டு வெளியே வாகனங்களில் சுற்றிவருகின்றனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக சிலர் பாட்டும் வெளியிட்டு வருகின்றனர். அந்தப் பட்டியலில் தற்போது இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார். ரகுநந்தன் இசையமைக்கவுள்ள இந்தப் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அப்பாடலின் வரிகள் பின்வருமாறு