தமிழில் கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான 'நிழல்கள்' படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இதில் உள்ள 'பொன்மாலைப் பொழுது' பாடலுக்கு வரிகள் எழுதியது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், கவிஞர் வைரமுத்து.
இந்த நிலையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் வெளியாகி, இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள் பலரும் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் புலர்ந்து இன்றோடு நாற்பதாண்டுகள் நிறைவடைந்து விட்டது. நான்கு தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் முன்னிலை கவிஞராகத் தொடர்ந்து, இயங்கி வரும் தமிழ் இலக்கிய வரலாறு கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வணக்கங்கள், வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அஜித், விஜய்யிடம் எனக்குப் பிடித்த பண்புகள் இவைதான் - விவேக்