சினிமா தியேட்டருக்கும் மனிதனுக்கும் உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. நம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் சினிமா தியேட்டரின் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். அதுவும் நாம் நீண்டகாலமாக படம் பார்த்த சினிமா தியேட்டரில் நம்முடைய திரைப்படம் வெளியானால் எப்படி இருக்கும்! இயக்குநர் சீனு ராமசாமி அப்படியான ஒரு நிகழ்வை பற்றிதான் பதிவு செய்திருக்கிறார்.
சீனு ராமசாமியின் லட்சுமி தியேட்டர் நினைவலைகள்! - theatre
இயக்குநர் சீனு ராமசாமி தான் படம் பார்த்து மகிழ்ந்த சினிமா தியேட்டர் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
Dharmadurai
’தென்மேற்குப் பருவக்காற்று’ , ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட தனித்துவமான படங்களைத் தந்தவர் சீனு ராமசாமி. அவருடைய ‘தர்மதுரை’ திரைப்படம் திருப்பரங்குன்றம் லட்சுமி தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர், ”எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. நான் படம் பார்த்து வளர்ந்த திருப்பரங்குன்றம் லட்சுமி தியேட்டரில் என் படம்” என பதிவு செய்துள்ளார்.