தென் தமிழ்நாட்டில் உள்ள தேனி,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்வது, முல்லைப் பெரியாறு அணை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இந்த அணையை தனது சொத்துக்களை விற்று கட்டி முடித்தவர், கர்னல் ஜான் பென்னிகுயிக்.
சாமியாக வணங்கப்படும் பென்னிகுயிக்
தென்தமிழ்நாட்டில் 1876-78ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சத்தால், கொத்து கொத்தாய் செத்து மடிந்த மக்களின் வாழ்க்கை பசுமையாக மாறியது, முல்லைப் பெரியாறு அணையினால் தான். இதன் காரணமாக தாகம் தீர்த்த தந்தையாக, தென் மாவட்ட மக்களால் இன்றளவும் கர்னல் ஜான் பென்னிகுயிக் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
இந்நிலையில் பென்னிகுயிக்கின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.